×

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பயிற்சி பெறும் வேற்று மாநில வனச்சரக அதிகாரிகள்

பெரியகுளம், செப். 20: உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அந்த மாநில அரசால் நடத்தப்படும் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட வனச்சரக அதிகாரிகளுக்கான தேர்வில் உத்தரபிரதேச மாநிலத்தில் 25 நபர்களும், மேற்கு வங்கத்தில் 24 நபர்கள் என மொத்தம் 49 வனச்சரக அதிகாரிகள் தேர்வான நிலையில் அவர்களுக்கான 18 மாத கால பயிற்சிகளை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் போது அடர்ந்த காடுகளில் வளர்க்கப்படும் மரங்களின் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் அவற்றால் இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு மழைப் பொழிவு ஏற்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மண் மற்றும் பாறைகளின் தன்மை அவற்றில் அதிக அளவில் வளர்ந்து வரும் இயற்கை மரங்கள் மற்றும் அரசால் வளர்க்கப்படும் மரங்கள் அவற்றின் தன்மை குறித்து பயிற்சியும் விளக்கமும் தமிழக வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பாரதி, வெளி மாநில வனச்சரக அதிகாரிகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.

Tags : Forest ,Western Ghats ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...