லண்டன் சென்று திரும்பிய திமுக எம்எல்ஏக்களுக்கு வரவேற்பு

ஆண்டிபட்டி, செப். 20: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டு திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நேற்று ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த நிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரி மைய பூங்காவில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி இங்கிலாந்து நாட்டின் பென்னிகுயிக் சிலை திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்க்காக தேனி மாவட்டம் தெற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் சென்றிருந்தார். இதில் கடந்த 12ம் தேதி சிலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆண்டிபட்டிக்கு வந்தனர். இவர்களை திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் எம்எல்ஏ மகாராஜன் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: