திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்

அன்னூர், செப்.20:  அன்னூரில் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டாம் என திமுக அதன் கூட்டணியினர் கடை கடையாக துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்கள், வியாபாரிகளிடம் பிரசாரம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம், அன்னூரில் கடையடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க கூடாது, என கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் அன்னூரில் கடைகளை திறக்க போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க கோரி திமுகவினர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அன்னூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Related Stories: