ஆயிரம் கிலோ பாலித்தீன் அகற்றம் மோர்ப்பண்ணை கடற்கரையில்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.20: சர்வதேச கடற்கரை தினத்தை முன்னீட்டு மோர்ப்பண்னை கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கடற்கரை தூய்மை இயக்கம், நேரு யுவகேந்திர சார்பாக கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சி ஊராட்சி தலைவர் முருக வள்ளிபாலன், மீன்வளம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் தலைமையிலும், மீனவர் சங்கத்தின் சம்மேளன முதன்மை நிர்வாகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். சம்மேளன பணியாளர்கள், கலங்கரை விளக்க மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன் விற்பனை கூட்டு பொறுப்பு குழு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு 1000 கிலோவிற்கும் மேலான பாலிதீன் பைகள் மற்றும் கழிவுகளை கடற்பகுதியில் இருந்து அகற்றி கடற்கரையை தூய்மை படுத்தும் பணி ஈடுபட்டனர்.இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: