புரட்டாசி மாதம் எதிரொலி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மதுரை, செப்.20: புரட்டாசி மாதத்தையொட்டி மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் சிலர் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவர். இதனால் காய்கறிகளுக்கு அதிக கிராக்கி இருக்கும். விற்பனையும் அதிகமாக இருக்கும். மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வரும். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழை கரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து அவரைக்காய், மல்லி, பீன்ஸ் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் (கிலோவில்): கேரட் ரூ.80, பட்டாணி ரூ.150, முள்ளங்கி ரூ.30, மொச்சை ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, புடலங்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.40, கோவைக்காய் ரூ.30, நைஸ் அவரை ரூ.60, பட்டை அவரை ரூ.90, பட்டர் பீன்ஸ் ரூ.140, ரிங் பீன்ஸ் ரூ.90, பீட்ரூட் ரூ.50, வெண்டைக்காய் ரூ.25, சுரைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.70, கத்தரிக்காய் ரூ.40, குடை மிளகாய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50, இஞ்சி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, கருவேப்பிலை ஒரு கட்டு ரூ.30, புதினா ஒரு கட்டு ரூ.25, மல்லி ரூ.160க்கும் விற்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முடியும் வரை காய்கறிகள் சற்று விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: