×

நத்தத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பிரமாண்டமாக நடத்த இடம் தேர்வு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

நத்தம், செப். 20: திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாவட்ட திமுக இளைஞரணியினரும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி நத்தத்தில்  திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரும் 24ந் தேதி நத்தத்தில் இக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. இதற்காக மதுரை செல்லும் சாலையில் கே.எஸ்.எஸ். கார்டனை சேர்ந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணியை  திமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். அந்தப் பணிகளுக்காக இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் எந்த வகையில் வசதிகளை அமைத்து ஏற்பாடு செய்வது என்பது குறித்து இடத்தை பார்வையிட்டு பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனை திமுகவைச் சேர்ந்த மாவட்ட பொருளாளரும் முன்னாள் எம் எல் ஏவுமான ஆண்டி அம்பலம், மாநில செயற்குழு உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான விஜயன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக் குமார், பழனிச்சாமி, தர்மராஜ், மோகன், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், நகர அவைத்தலைவர் சரவணன் ,மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நகர துணைச் செயலாளர் சகுபர் சாதிக், நகர இளைஞரணியைச்  சேர்ந்த இப்ரில் ஆசித் உள்ளிட்ட கட்சியினர் சென்று பார்வையிட்டனர்.

Tags : Dravidian ,Nadda ,
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...