×

வத்தலக்குண்டுவில் கோஷ்டி மோதலில் விசிக நிர்வாகிக்கு கத்தி குத்து ஆறு பேர் கைது

வத்தலக்குண்டு, செப். 20: வத்தலக்குண்டுவில் சம்பள பிரசனையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விசிக நிர்வாகியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு பெத்தானிய புரத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்(48). இவர் எலெக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தங்கமுருகன்(45). இவரும் எலக்ட்ரிசியன். வேலைக்கு சென்றதில் தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை ஆல்பர்ட் தங்கமுருகனிடம் கேட்டுள்ளார். அதில் இரண்டு பேருக்கும் வாய் த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நில மீட்பு பிரிவு மாநில துணைச் செயலாளர் உலக நம்பி தங்கமுருகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த ஆல்பர்ட் மறைத்து வைத்திருந்த கத்தியால் உலக நம்பி மார்பில் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த உலக நம்பி அங்கு கிடந்தகட்டையால் ஆல்பர்ட்டை தாக்கினார். அதில் ஆல்பர்ட் கை காயமடைந்தது. அதைத் தொடர்ந்து தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம், சில வீடுகள் சேதமடைந்தது. காயமடைந்த உலக நம்பி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல காயமடைந்த ஆல்பர்ட் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உலக நம்பி ஆதரவாளர்கள் ஆல்பர்ட் ஆதரவாளர்களை கைது செய்ய கோரி பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் இருந்த நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடங்களுக்கு சென்று சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து உலக நம்பிகொடுத்த புகாரின் பேரில் முருகன், சாலமன், உதயகுமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆல்பர்ட் கொடுத்த புகாரின் பேரில் தங்க முருகன், ஜோதி, ராம்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். வத்தலக்குண்டு போலீசார் வழக்குகள் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Vishika ,Vatthalakundu ,
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...