×

பழநி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

பழநி, செப். 20:  பழநி அருகே ஆயக்குடி ஐ.டி.ஓ மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னம்பலம் வரவேற்றுப் பேசினார். ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் மேனகாஆனந்தன், துணைத்தலைவர் சுதாமணி கார்த்திகேயன் ஆகியோர் பள்ளி மாணவ&மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் திமுக பேரூர் செயலாளர் சின்னத்துரை, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் பிரச்சன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani School ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு