×

கடத்தல், பதுக்கிய வழக்கில் 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர், செப். 20:  பண்ருட்டி அருகே உள்ள ஒரு இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார், சேலம்- பண்ருட்டி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் அரிசி ஆலையின் பின்புறம் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில், 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருக்கோவிலூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேஷ் (32) என்பவர் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...