திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

திருவாரூர்,செப்.13: திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் டிஆர்ஓ சிதம்பரம், ஆர்.டி.ஓ.க்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியக்கோட்டி மற்றும் திமுக சார்பில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் முருகானந்தம் மற்றும் அரசியல் காட்சியினர் கலந்து கொண்டனர்.

இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியாதவாது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நகர மற்றும் கிராமப் பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல், பழுதடைந்த வாக்குசாவடி கட்டிடங்களுக்கு பதிலாக புதியகட்டடங்கள் இருப்பின் மாறுதல் செய்தல் மற்றும் வாக்குசாவடிமைய கட்டிட பெயர் மாற்றம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், நகர்புறம் மற்றும் கிராமப்புறம் உட்பட 1178 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மறு சீரமைப்பிற்குள்ளாகும் 1500க்கும் மேற்பட்ட வாக்களர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில், கூத்தாநல்லூர் வட்டத்தில் பாகம் எண்: 82 மற்றும் 83லும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில், கூத்தாநல்லூர் வட்டத்தில் பாகம் எண்: 282லும், செயல்பட்டுவந்த வாக்குச்சாவடி மையகட்டடம் பழுதானதால் புதியகட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் மாறுதல் செய்திட தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து முன்மொழிவு வரப்பெற்று மேல் நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டுள்ளது. திருத்துறைபூண்டி மற்றும் நன்னிலம் எம்எல்ஏ தொகுதிகளில் வாக்குசாவடி மையம் மாறுதல் தொடர்பாக எவ்வித முன்மொழிகளும் பெறப்படவில்லை. மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி மையங்களின் பட்டியல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன். தெரிவித்துள்ளார்.

Related Stories: