பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதிகளில் தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்,செப்.13: திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடைவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன. அதன்படி ஆண் 8 நபர்களும், பெண் 6 நபர்களும் நேர்காணல் மூலம் இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. அரசு விதிகளின்படி முன்னுரிமை பெற்றவர், முன்னுரிமை பெறாதவர் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.

இதற்காக பின்வரும் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 22ம் தேதி மாலை 5 மணிவரையில் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பாக 1.7.2022 தேதியன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் 18 முதல் 35 வயதிற்குள்ளும், பிசி,பிசி (இஸ்லாமியர்), எம்.பி.சி பிரிவினர் 18 முதல் 32 வயதிற்குள்ளும், இதரபிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடைய நபர்கள் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுமாறும், பெறப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து,சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஒட்டி அதனை மீண்டும் அதே அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

கால தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள், முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகிய வற்றினைஅரசு பரிசீலிக்க இயலாது எனவும், அதற்கு மனுதாரரே முழு பொறுப்புஎனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பகுதி நேர தூய்மைபணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: