தஞ்சாவூரில் ஊர்காவல் படையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர், செப்.13: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ஊர்காவல் படையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகளிர் ஊர்காவல் படை நலன் பேணும் வகையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு முதுநிலை மருத்துவர் பரிசோதித்து ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமை சிறந்த முறையில் தஞ்சை ஊர்காவல்படை துணை மண்டல தளபதி டாக்டர் மங்களேஸ்வரி குமரவேல் ஏற்பாடு செய்திருந்தார். இம்முகாமில் அனைவருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை சிறுநீர் பரிசோதனை தைராய்டு பரிசோதனை கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: