அரியலூரில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் செப் 13:அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் அரியலூரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) அரியலூர் கிளை தலைவர் நீலமேகம், ஜெயங்கொண்டம் கிளை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். இதில் ராஜேந்திரன்,கணபதி, சிவக்குமார்உள்ளிட்ட எல்ஐசி கிளைகளின் லிகாய் முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை மீது ஒன்றிய அரசு அதிகமாக விதித்துள்ள வரிகளை உடனே வாபஸ் பெற வேண்டும்.

 ஐ.ஆர்.டி.ஏ அமைப்பு, எல்.ஐ.சி முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை உடனே வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா பேசினார்.இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி,லிகாய் அமைப்பின் தஞ்சை கோட்ட செயற்குழு உறுப்பினர் அருமைகண்ணு,மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன்,மாவட்ட செயலாளர் முருகானந்தம்,கோட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்ட முடிவில்அரியலூர் கிளை பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories: