புதிய வழித்தடத்தில் 2 பேருந்து சேவை

கம்மாபுரம், செப். 13: கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து புவனகிரி, மருதூர், வடலூர், சென்னை செல்ல புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தும், விருத்தாசலத்திலிருந்து கம்மாபுரம்- க.புத்தூர் வழியாக சிறுவரப்பூர், ஓட்டிமேடு வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கடலூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலர்கள் ராயர், தங்கஆனந்தன், திருமாவளவன், செந்தில்குமார், மதியழகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இளவரசன், ஒன்றிய தலைவர் ராமசாமி, பொருளாளர் இளவரசன், துணைச் செயலர் வேல்முருகன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் சிலம்பரசன், க.புத்தூர் கிளைச் செயலாளர் விஜயசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: