×

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கள்ளிப்பட்டியில் திறப்பு

கோபி,செப்.13:கோபி அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் பல இடங்களில் நெல் பயிர்கள் மழை காரணமாக வயிலில் சாய்ந்து சேதமானது. இதனால் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்க இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் மையம் நேற்று திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து  அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நேற்று நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன், கொங்கர்பாளையம் சண்முகம்,கோபி தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் ஈரோடு மண்டல மேலாளர் முருகேசன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மனோகரன், கள்ளிப்பட்டி நெல்கொள்முதல் அலுவலர் (மோகனசுந்தரம்,) ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ்வரன் (கணக்கம்பாளையம்), மரகதம் பாலு (கொண்டையம்பாளையம்), அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Gallipatti ,
× RELATED சிவகாசி அருகே நெடுங்குளம்...