×

பாரதியார் நினைவு நாள்

அவிநாசி, செப்.13: பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பில், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமுஎச மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சம்பத் வரவேற்றார்.  விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர்  முத்துசாமி  சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் , கோவை சதாசிவம், மாவட்டத் தலைவர் கணேஷ், மாவட்டச் செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் தினகரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், ஒன்றிய நிர்வாகிகள் நீரோடை மகேஷ், பழனிச்சாமி, மணிகண்டன்பிரபு, நல்லது நண்பர் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bharathiar Memorial Day ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ