அண்ணா பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் செப்.15ல் சைக்கிள் போட்டி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி,செப்.10: தூத்துக்குடியில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் வரும் 15ம் தேதி சைக்கிள் போட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து கீழ்க்கண்ட வயது பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டரும், மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும் போட்டி நடைபெறும். 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் போட்டி நடைபெறும்.  17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும், 4 முதல் 10ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவியர் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும்.  சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் 15.09.2022 அன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி விளையாட்டரங்கத்திற்கு தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட வயதுச்சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயதுச் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சைக்கிள் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: