×

தா.பேட்டை அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் நூதன கொள்ளை

தா.பேட்டை, செப். 10: துறையூர் தாலுகா கண்ணனூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் வீரசங்கு (55) விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (43). நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீரசங்கு மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். வீட்டைபூட்டி விட்டு வீரசங்குவின் தாயார் வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது சொகுசு காரில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத பெண் தனியாக இருந்த மூதாட்டியிடம் தெரிந்த நபர் போல் பேசி தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் வீட்டு சாவி ஜன்னல் அருகே வைத்திருப்பதை மூதாட்டி அந்த பெண்ணிடம் கூறி உள்ளார். பின்பு சாவியை எடுத்து பீரோவை திறந்து 17 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 2 லட்சம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு காரில் ஏறி சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த விவசாயி வீரசங்கு பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர். துவரங்குறிச்சி அருகே கைவரிசை: சென்னை கேளம்பாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(51). இவர் வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து தனது காரில் குடும்பத்துடன் ராஜபாளையம் புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு சென்றுள்ளார். நள்ளிரவு கார் திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் வலசுப்பட்டி அருகே வந்தபோது உடல் அசதி ஏற்படவே, காரை சாலையோர பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளனர். பின் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது காரில் கைப்பையில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து வளநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு கடன் வழங்கும் முகாம் திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.முகாமில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் வீட்டுக் கடன் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தில்லை நகர் கிளை மேலாளர் யோகேஸ்வரன் வீட்டு கடனுக்கான முன் அனுமதி கடிதம் வழங்கினார். இதில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

Tags : Da Pettai ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....