திருமயம் அருகே பைக் திருடிய வாலிபர் கைது

திருமயம். செப்.10:திருமயம் அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(46). இவர் புலிவலம் டாஸ்மாக் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு மது வாங்க சென்றார். இதனைத் தொடர்ந்து மது வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது பைக் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் நமணசமுத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே திருட்டு போன பைக்கை அரங்கினாம்பட்டி ஆறுமுகம் மகன் ராஜ்குமார்(26) வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: