×

இன்று உதவி இயக்குனர் அழைப்பு கறம்பக்குடி அருகே புதுப்பட்டியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

கறம்பக்குடி, செப்.10: புதுப்பட்டியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். கறம்பக்குடி அருகே புதுப்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை அருகே அனுமதியின்றி மது விற்பதாக கறம்பக்குடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதைய தகவலையடுத்து எஸ்ஐ செல்லத்துரை தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மது பான கடை அருகே அனுமதியின்றி திருவாசபுறம் கிராமத்தை சேர்ந்தவ மாதவன் (25). என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pudhupatti ,Karambakudi ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை