அருப்புக்கோட்டையில் எல்ஐசி ஏஜென்ட் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை, செப். 10: அருப்புக்கோட்டையில் எல்ஐசி சங்கத்தின் சார்பில் மதுரை ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் உமாதேவி தலைமை வைத்தார் செயலாளர் பாரதியார் வரவேற்றார். பொருளாளர் குணசேகரன் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பாலிசிகளுக்கு போனசை உயர்த்திக் கொடுக்கவும், சிஎஸ்டி வரியை நீக்கிடவும், ஏஜென்ட் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கவும், முகவர் நல நிதி அமைத்திடவும், பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கவும், எனபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஜென்ட்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: