கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோயில் ஆவணி மாத திருவிழா

கந்தர்வகோட்டை, செப்.10: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை நகரில் குடிகொண்டிருக்கும் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாத திருவிழா நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழாக்களும், மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வரும் இதனை முன்னிட்டு இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து இருந்தனர். திரளான பக்தர்கள் வந்து அம்மன் அருள் பெற்று சென்றனர். ஆவணி திருவிழாவை முன்னிட்டு மட்டாங்கால் கிராமத்தில் இருந்து ஆவணி 24ம் நாள் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் அலங்கார ஊர்தியில் வண்ணமிகு விளக்குகள் பொருத்தி வாகனத்திற்கு பின்னால் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினார். பூத்தட்டு எடுத்து வந்த பெண்கள் ஆனந்தத்துடன், பயபக்தியுடனும், மகிழ்ச்சியுடன் பூத்தட்டு எடுத்து வந்தனர். மட்டாங்கால் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பாதுகாப்பு அரணாக இருந்து வழிநடத்தி சென்றனர்.

Related Stories: