கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இல்ல திருமண விழா: காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு

கமுதி, செப். 10: கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், திமுக தெற்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளருமான துரைப்பாண்டி இல்ல திருமண விழா நேற்று முன்தினம் கோவிலாங்குளம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாற்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன், மனோகரன், சண்முகநாதன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார், தொண்டரணி அமைப்பாளர் ஒ.கரிசல்குளம் பாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: