அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ வேண்டுகோள் பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 13ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர்,செப்.10: பெரம்பலூரில் வரும் 13ம்தேதி மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என்று பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் கீழுள்ள பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வருகிற 13ம்தேதி காலை11.30 மணி முதல் பகல் 1 மணி வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா தலைமையில், மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் கோட்டசெயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: