×

அரியலூரில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

அரியலூர்,செப்.10: அரியலூரில் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குறு வட்ட அளவிலான பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகள போட்டி நிகழ்ச்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மான்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தடகள போட்டிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வைத்தார். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என முப்பது பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இக்குறு வட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 100 மீ, 200மீ, 400 மீ,600 மீ, 800 மீ,1000 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல்,ஈட்டி எறிதல்,குண்டு எறிதல்,தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகட போட்டிகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து இத்தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் விளாங்குடி உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை மீனா குமாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் வீரபாண்டியன், ரமேஷ், வில்லாளன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இப்போட்டிகளில் முதலாமிடம் மற்றும் இரண்டாமிடம் வென்ற பள்ளி மாணவ மாணவியர்கள் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...