×

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருமங்கலம், செப். 10: திருமங்கலம் அருகே, கீழக்கோட்டை ஊராட்சி அயன்மல்லம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் மற்றும் கற்பகவிநாயகர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி கடந்த மாதம் 31ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கடந்த 8ம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. அன்று மாலை அனுக்கை பூஜை, வாஸ்து சாந்தி, முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதை தொடர்ந்து கோபூஜை, ஜெயபாராயணம், மகாபூர்ணாஹீதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களின் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.29 மணிக்கு பெருமாள் கோயில் கோபுரம், விநாயகர் கோயில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெருமாள், கற்பகவிநாயகர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கீழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி, மேலக்கோட்டை பஞ்சாயத்துதலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vinayagar Temple ,Kumbabhishekam ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா