×

தமிழக மீனவர்கள் படகு தாக்கி மூழ்கடிப்பு: தலைவர்கள் கண்டனம்

சென்னை:  வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): புதுக்கோட்டை தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற மெசியா (30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகியோர் சென்றனர். அப்போது இலங்கைக் கடற்படையின் 2 படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது. இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): சிங்களப்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் கண்டிக்கத்தக்கவையாகும்.இது, இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை வெளியுறவு அமைச்சகம் அழைத்து இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இனியும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும்….

The post தமிழக மீனவர்கள் படகு தாக்கி மூழ்கடிப்பு: தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Vaigo ,Secretary General ,Madimuga ,Mesia ,Pudukkottai ,Donghakimadam Health Chesu ,TN ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி...