வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம்

கரூர், செப்,10: கரூர் சரகம் கரூர் வட்டாரத்தில் உள்ள ஆர்.1572 வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு சங்க செயல்பாடுகள் குறித்து களமேலாளர் விரிவாக தமது உரையில் எடுத்துக் கூறினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேற்பார்வையாளர் அருண்குமார் சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்வதால் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவுரை நிகழ்த்தினார். சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தர் கவிதாநன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்க பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் செய்திருந்தது.

Related Stories: