×

பாரத் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

கிருஷ்ணகிரி, செப்.7: கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. தாளாளர் கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். நிறுவனர் மணி தலைமையேற்று அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார். மேலும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மூர்த்தி, இரண்டாம் பரிசு பெற்ற அருண்பிரசாத், 3ம் பரிசு பெற்ற செல்வராஜ் மற்றும் ஆசிரியைகளில் சிந்து, நசீமாபேகம், அம்ரீன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பாரத் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளையின் செயலாளரும், கேஎம்எஸ் குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் சந்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் பூங்கொத்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர்பாஷா மேற்பார்வையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Teacher's Day ,Bharat School ,
× RELATED சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான...