×

செம்மேடு கிராமத்தில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் உற்பத்தி பயிற்சி

பண்ருட்டி, செப். 7: பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் உற்பத்தி பயிற்சி நடந்தது. பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இயற்கை நெல் ரகங்களான கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சலி சம்பா, சிவப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி போன்ற ரகங்கள் இயற்கை முறையில் பயிர் செய்து லாபம் பெறலாம் மற்றும் இயற்கை முறையில் வயலில் மாட்டு சாணம் மற்றும் மக்கிய தொழு உரமான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் கரைசல் போன்றவைகளை பயிரில் கையாளப்படுத்தலாம், முக்கியமாக பி.எம்.கிசான் திட்டத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் நில ஆவணங்களை இ.சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களில் உடனடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டன. பசுமை போர்வை திட்டத்தின் கீழ் தமிழக அரசு இலவசமாக சந்தனம், ஈட்டி, தேக்கு ஆகிய மரக்கன்றுகளை விவசாயிகள் பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. வேளாண் உதவி அலுவலர் தங்கதுரை வேளாண்மை திட்டங்கள் குறித்து கூறினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் மணிகண்டன், உதவி நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Semmedu village ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை