அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 7: மின்வாரிய ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாநில துணை பொது செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஐஎன்டியுசி மாநில தலைவர் மனோகரன், மாவட்ட தலைவர் ரமேஷ், கணக்காயர் கள தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் வேங்கடபதி, சிஐடியு மாவட்ட செயலாளர் தேசிங்கு, பொறியாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் இளவழகன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் கழகத்தின் வட்ட பொருளாளர் அருள் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: