×

மணவெளியில் 4 ஆண்டுகளாக கிறிஸ்துவ தேவாலய வளாகத்தில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்


முஷ்ணம், செப். 7: முஷ்ணம் அருகே வானமாதேவி ஊராட்சிக்குட்பட்ட மணவெளியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளி அப்பகுதி மாரியம்மன் கோயில் இடத்தில் செயல்பட்டு வந்தது. பள்ளி நடைபெற்ற இடத்தில் அப்பகுதிவாசிகள் கோயில் கட்டுவதாக தெரிவித்ததையடுத்து போதிய இடமின்றி பின்னர் அப்பகுதி கிறிஸ்துவ தேவாலய வளாகத்தில் அரசு ஒன்றிய பள்ளி மாணவர்கள் 21 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் உள்ளனர். 4 ஆண்டுகளாக போதிய கட்டிட வசதியின்றி கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதியில் பள்ளிக்கான இடம் ஒதுக்கி தருவதாக தனியார் முன் வந்தும் பள்ளி அமைய பாதை வசதியின்றி உள்ளது. இந்த பாதை முஷ்ணம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

இந்த பள்ளிக்கு வேண்டிய பாதை வசதியை செய்து தருமாறு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விழுப்புரம் இணை ஆணையர், கடலூர் துணை ஆணையர், முஷ்ணம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கல்வித்துறைக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில போதிய பாதை மற்றும் கட்டிட வசதி செய்திட முன் வரவேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Manaveli ,Christian ,Church ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...