மணப்பாறை நகராட்சியில் தலைவர், து.தலைவர் பதிவியை திமுக கைப்பற்றியது

துவரங்குறிச்சி, செப்.7: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று காலை நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. திமுக 17, அதிமுக 10 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர் அரங்கிற்கு வந்திருந்தனர். லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன், மணப்பாறை நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 25வது வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல்ராஜ் திமுக தரப்பிலும், 27வது வார்டு உறுப்பினர் ராமன் அதிமுக தரப்பிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று 7வது நகர்மன்ற தலைவராக அறிவிக்கப்பட்டார். அதிமுக 8 வாக்குகள் மட்டுமே பெற்றது. ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட 17-வது வார்டு உறுப்பினர் முத்துலெட்சுமி மொத்தம் வாக்களித்த 27 உறுப்பினர்களில் 15 வாக்குகள் பெற்று 7வது நகர்மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக 11 வாக்குகள் மட்டுமே பெற்றது. ஒரு வாக்கு செல்லாதவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றி திமுக மீண்டும் மணப்பாறை நகராட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

Related Stories: