நன்னிலம் அடுத்த பேரளத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

நன்னிலம்,செப்.7: நன்னிலம் அடுத்த பேரளம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நன்னிலம் அடுத்துள்ள பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், தலைமையேற்று, பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேருக்கு தமிழக அரசு வழங்கிய, சைக்கிளில் வழங்கி பேசினார். பேரூராட்சி தலைவர் பேசும்போது, தமிழக அரசு, அரசு பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாணவர்களின் பொருளாதார தரம் உயர,  கல்வியில் மேம்பட்டு நிற்க, எண்ணற்ற. திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மாணவர்கள் இத்திட்டங்களை பயன்படுத்தி, உங்களின் கல்வி நிலையில் மேம்பட்டு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, உங்கள் பெற்றோரின் கனவை நனவாக்க, இளமையில் கற்கும் கல்வியை கொண்டு பயனுற வேண்டுகிறேன் என்றார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மாதவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

Related Stories: