×

புதையல் ஆசை காட்டி பல பெண்களிடம் நூதன மோசடி ஒரத்தநாடு கோயில் பூசாரி விரட்டியடிப்பு, பரபரப்பு

ஒரத்தநாடு,செப். 7: ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் திரவுபதி அம்மன் கோயிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பூசாரியாக இருந்தார். இவர் வசிப்பதற்கு இப்பகுதி மக்கள் ஒரு வீட்டை வழங்கினர். இந்நிலையில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூரில் இருந்து வரும் பெண்களிடம் தங்கப்புதையல், பண புதையல் எடுத்து தருவதாக கூறி பல லட்சம் நூதன மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.23 லட்சமும், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் ரூ.5 லட்சமும் கொடுதுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், கோயிலுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த அறிந்த பல பெண்கள் பல ஊர்களில் இருந்து வர தொடங்கியுள்ளனர். கோயில் பூசாரி நூதன மோசடி ஈடுபட்டதால், கிராம பொதுமக்கள் ஒன்று கூடி பூசாரியிடம் இருந்த கோயில் சாவியை பெற்று கொண்டு விரட்டி அடித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு  ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 853.180 மெ.டன் மற்றும்  பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 1642 மெடன் அளவுள்ள அரவை  கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு