×

பொன்னமராவதி ஒன்றியக்குழு கூட்டத்தில் வார்டுக்கு தேவையான வசதி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி, செப். 7: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத்தலைவர் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன், ஒன்றிய ஆணையர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரதராஜன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அடைக்கலமணி, முருகேசன், பழனிச்சாமி, மாணிக்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலர்கள், பிறதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponnamaravati Union Committee ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு