×

சமுதாய நல பயிற்றுநர்களுக்கு ரத்தசோகை விழிப்புணர்வு பயிற்சி

தா.பழூர்,செப்.7: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய நல பணியாளர்களுக்கான ரத்தசோகை ஒழிப்பு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தா.பழூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது ரத்தசோகை நோய் தடுப்பது குறித்தும் பயன்படுத்த வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் வகைகள் குறித்தும் பேசினார். வட்டார சுகாதார செவிலியர் விஜயராணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கினார். இப்பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்தை சேர்ந்த சமுதாய நல பயிற்றுநர்கள் 19 பேர் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கில் சத்துள்ள தானியம் மற்றும் கீரை மற்றும் காய்கறி, பழங்கள் வகைகள் குறித்த உணவுப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anemia ,Training for ,Social Welfare Practitioners ,
× RELATED வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட...