×

காரைக்காலில் செப்.9ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம்

காரைக்கால்,செப்.7: காரைக்கால் போராளிகள் குழு நிர்வாகிகளில் ஒருவரான ஐ.அப்துல் ரஹீம் நிருபர்களிடம் கூறியது: சிறுவன் பாலமணிகண்டன் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரை சந்தித்து 4 கோரிக்கைகளை முன்வைத்தோம்.மேலும், காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியாணை பெற்று, ஊதியம் பெற்றுக் கொண்டு புதுச்சேரியில் டெபுடேஷன் அல்லது சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற அடிப்படையில் பணியாற்றுவோர் அனைவரையும் உடனடியாக காரைக்கால் மருத்துவனைக்கு பணிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். விஷம் அருந்திய பள்ளி மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள், செவிலியர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை நீண்ட காலமாக சரிவர செயல்படாமல் உள்ளதால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் செப்.9-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், பலதரப்பட்ட இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...