×

மாதாந்திர ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் ஆசிரியர் தின விழா

நாகப்பட்டினம், செப்.7: நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த.ஆனந்த் பொன்னாடை அணிவித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். அவர் ேபசும்போது, ஒருநாடு முன்னேற வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை வழிநடத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆலோசகர் ராமதாஸ் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி முதல்வர்களும் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவில் பள்ளி முதல்வர் வகீதா நன்றி கூறினார்.

Tags : Study Meeting Teacher's Day Celebration ,Sir Isaac Newton School ,Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்