ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் கரூர் பேருந்துநிலைய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தில் தண்ணீர் வராததால் பயணிகள் அவதி

கரூர், செப். 7: கரூர் பேரூந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தில் தண்ணீர் வராத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் நகரின் மையப்பகுதியில் பேரூந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவை உள்ளது. தொழில் நகரமான கரூருக்கு தினமும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் கரூர் பேருந்து நிலையம் இடநெருக்கடியில் உள்ளது.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூந்து நிலைய வளாகத்தில் பயணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பருகும் வகையில் அதற்கான மையம் அமைக்கப்பட்டு சில மாதங்கள் செயல்பட்டது.

ஆனால், தற்போதைய நிலையில், இந்த குடிநீர் மையம் செயல்படாத நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மைய வளாகத்தை பார்வையிட்டு பயணிகள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சுத்தம் செய்து, குடிநீர் சப்ளை வழங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: