×

மானாமதுரையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

மானாமதுரை, செப்.7: மானாமதுரையில் திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனைகளை விளக்கி கூறும் திராவிடமாடல் பயிற்சி பாசறை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரும் பேரூராட்சித்தலைவருமான சேங்கைமாறன், முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்எல்ஏவுமான தமிழரசி ரவிக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார். கூட்டத்தில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, மானாமதுரை ஒன்றியக்குழு தலைவர் லதாஅண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, நகராட்சித்துணை தலைவர் பாலசுந்தரம், இளைஞரணி நிர்வாகி மாரிக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Dravida Model Training Center ,Manamadurai ,K.R.Periyakaruppan ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...