ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி

கமுதி, செப்.7: கமுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நம்ம ஊரு சூப்பர் திட்டம் ஆகியவை சார்பில்,போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை கமுதி-மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் முன்பு துவங்கியது.இந்த பேரணியை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் சுய உதவிக் குழுவை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியில் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.பேரணியில் போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் நன்மைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.பேரணிக்கான ஏற்பாடுகளைவட்டார இயக்க மேலாளர் மயில்ராஜ் செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் திரவியம், பில்லத்தியான், கணக்காளர் மாரீஸ்வரி, சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுனர் ஜான்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: