மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை, செப்.7: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமையில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி முன்னிலையில் நேற்று நடந்தது.ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், சொத்து வரி திருத்தம், சுகாதாரம், தெருவிளக்கு வசதி வேண்டுதல் உள்ளிட்ட மனுக்கள் மற்றும் சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மனுக்கள் உள்பட மொத்தம் 75 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது. உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: