தொடர் மழையால் வேகமாக நிரம்பும் ரேலியா அணை

குன்னூர், செப்.7:  குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை  நிரம்பி வருவதால்  பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது ரேலியா அணை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக  நீர் மட்டம் உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ரேலியா அணையின் நீர்மட்டம்  உயர்ந்து

வருகிறது.   ரேலியா அணை  43 அடி உள்ள நிலையில் தற்போது 41 அடிக்கு மேல் தண்ணீர் நிறைந்துள்ளது. இனி வரும் காலங்களில்  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: