×

ஏ.டி.சி., பகுதியில் அரசு பஸ்களில் சீட் பிடிக்க முண்டியடித்து செல்வதால் விபத்து அபாயம்

ஊட்டி, செப். 7:  ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மாலை நேரங்களில் பொதுமக்கள் பஸ்களில் ஏறுவதற்காக முண்டியடித்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி  ஏ.டி.சி பகுதி ஊட்டியின் முக்கிய மத்திய பகுதியாகும். இங்குள்ள ஏ.டி.சி  மார்கெட் பகுதியில் காய்கறி கடைகள், மருந்து கடைகள், புத்தக கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. மார்க்கெட்டில் உள்ள  கடைகளில் பொருட்களை வாங்குவதற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும்  ஏராளமானோர் நாள்தோறும் ஊட்டிக்கு வருகிறார்கள். இதனால் இப்பகுதி  பிஸியாக இருக்கும். குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி மற்றும் சமவெளி  பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ஏ.டி.சி., வழியாகதான் செல்லும். மார்கெட்டில்  பொருட்கள் வாங்கி விட்டு செல்பவர்கள் ஏ.டி.சி., பஸ்நிறுத்திற்கு வந்து  பஸ்களில் ஏறி செல்வார்கள். அதிகரட்டி, அறையட்டி, நுந்தளாமட்டம், கொல்லிமலை  மற்றும் கெந்தொரை, காரபிள்ளு, கடநாடு போன்ற கிராம பகுதிகளுக்கு வரும்  பஸ்கள் ஏ.டி.சியில் நிற்கும். இந்த பஸ்கள் வரும் போது பஸ்களில் சீட்  பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஓடுகின்றனர். இதனால்  இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் மாலை  நேரங்களில் பயணிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறுவதை தடுக்கும் வண்ணம்  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : ATC ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் ஏடிசி டவரில் தீ விபத்து