ஈரோட்டில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 7: அகில இந்திய அளவிலான முகவர்கள் சங்கங்களின் கூட்டு குழு இணைந்து இன்சூரன்ஸ் வாரவிழா புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரோடு பவானி சாலையில் உள்ள வடக்கு எல்.ஐ.சி, அலுவலகம் முன் எல்.ஐ.சி, முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாடு பாலிசி தாரர்களுக்கு ஏதுவான சேவை அளிக்க வேண்டும். முகவர்களுக்கு பணி கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குழு காப்பீடு வயது வரம்பு மற்றும் தொகையை உயர்த்த வேண்டும். முகவாண்மை குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.ஆர்பாட்டத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: