×

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 179 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை திருவாருர் கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர்,செப்.6: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 179 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவாரூர் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கண்மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மொத்தம் 179 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட குடிநீர் பேரூராட்சி வார்டுகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணிக் காக்கப்படுகிறது. அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது. தெரு விளக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றது. சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Tiruvarur Collector ,
× RELATED பருத்தி சாகுபடிக்கு புழுதி உழவு மனு...