டெல்டா மாவட்டங்களில் மழை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்ஜிகே.வாசன் பேட்டி

பெரம்பலூர்,செப்.6: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என ஜிகே.வாசன் கூறினார். பெரம்பலூரில் தமிழ் மாநிலக் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்தப் பேட்டி: கொரோனாவிற்கு பின் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேறி வருகிறது. மற்ற நாடுகளை விட பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறைவாகத் தான் உள்ளது. இருப்பினும் அதன் விலை வாசியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விக்ரம் போர்க்கப்பல் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடியது. இந்தக் கப்பலை, கப்பல் படையில் சேர்த்ததற்காக மத்தியஅரசை பாரா ட்டுகிறேன். தமிழக மக்களை அதிகளவில் பாதித்து வரும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண் டும். அப்படி திரும்பி பெறாவிட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். ஆன் லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய் யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது. டெல்டா மாவட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களு க்கு நிவாரண உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: