செந்துறை அருகே ஆதிக்குடிக்காடு திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர், செப்.6: செந்துறை அருகே ஆதிக்குடிக்காடு கிராமத்தில் உள்ள திரவுபதையம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஆதிகுடிக்காடு கிராமத்தில் விநாயகர், திரௌபதி அம்மன்,  வீரகந்தம் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் 2 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கடம் புறப்பாட்டுடன் மேள வாத்தியங்கள் முழங்க கோபுர உச்சிக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பத்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செயதனர்.

Related Stories: