கரூர் சணப்பிரட்டி ரயில்வே நிலைய குகை வழிப்பாதையில் மழையால் தேங்கிய தண்ணீர்

கருர், செப்.6: கரூர் சணப்பிரட்டி ரயில்வே நிலைய குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் சணப்பிரட்டி அருகே திருச்சி தண்டவாளப் பாதை குறுக்கிடுகிறது. சணப்பிரட்டியில் இருந்து அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரயில் செல்லும் போது நீண்ட நேரம் நிற்கும் நிலை இந்த பகுதியினர்களுக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே பாதையின் அருகே குகை வழிப்பாதை அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து தரப்பினர்களும் குகை வழியின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குகைவழிப்பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதோடு, தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: